கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஊராட்சித் தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தில் 10 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் நேரடியாக தலையிட்டு ஒதுக்குவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான உரிமைகள் பறிக்கப் படுவதாக குற்றம் சாட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.