Categories
மாநில செய்திகள்

திருநங்கைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சட்டம் இயற்றுக …!!

திருநங்கைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என சமூக ஆர்வலரான திருநங்கை சுதா தெரிவித்துள்ளார்.

திருநங்கைகளுக்கு எதிராக நடைபெறும் கொலை உள்ளிட்ட தாக்குதல்களுக்கு நீதி வழங்கக்கோரியும் திருநங்கைகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும் சென்னை சேப்பாக்கத்தில் திருநங்கைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சமூக ஆர்வலரான திருநங்கை சுதா தமிழகத்தில் திருநங்கைகளில் படுகொலைகள் அதிகரித்து உள்ளதால் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாகவும் இதனால் திருநங்கைகள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.

Categories

Tech |