Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இத சாப்பிடா…வயதானோருக்கு எளிதில் ஜீரணமாகும்…!!

வாழைப்பழ சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு                          – ஒரு கப்
வாழைப்பழம்                                – 1
தேன்                                                  – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு                                                   – ஒரு சிட்டிகை
நெய்                                                   – 2 டீஸ்பூன்
தண்ணீர்                                           – தேவையான அளவு
எண்ணெய்                                       – தேவையான அளவு

செய்முறை:

பாத்திரத்தில்  வாழைப்பழத்தை எடுத்து தோல் உரித்து நன்கு மசித்து கொள்ளவும். அதனுடன் கோதுமை மாவு, தேன், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துகெட்டியாக பிசைந்து  20 அல்லது 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

பிறகு, சிறிய உருண்டைகளாக உருட்டி அதை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும். அடுப்பில் தோசை கல்லை வைத்து எண்ணெய் அல்லது நெய் கலவையை சுற்றிலும் ஊற்றி அதில் உருட்டிய சப்பாத்தி மாவை நன்கு வேகவிட்டு எடுத்து கொள்ளவும்.

நெய் அல்லது வாழைபழத்தை வைத்து பரிமாறினால் சுவையான வாழைப்பழ சப்பாத்தி ரெடி. எனவே, இது சிறு குழந்தைகளுக்கும், மெல்ல முடியாத வயோதிகர்களுக்கும் கூட ஏற்ற ரெசிபி.

Categories

Tech |