Categories
அரசியல்

மக்களை பார்க்க நேரமில்லை….. நடிகைகளை சந்திப்பார்…. பிரதமரை விமர்சித்த காங்கிரஸ்….!!

விவசாயிகளை சந்திக்க நேரமில்லாத பிரதமருக்கு நடிகைகளை சந்திக்க நேரம் ஒதுக்க முடியும் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான சஞ்சய் தத் திண்டுக்கல்லில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தபோது, “ஆளும் கட்சி பீகார் சட்டமன்ற தேர்தலில் பின்னடைவை சந்திக்கும். வசந்தகுமாரின் பணிகளால் கன்னியாகுமரி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். தமிழகத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் மோடியும் அமித்ஷாவும் ஆட்டுவிப்பது போன்று ஆடுகின்றனர். சாமானிய மக்களின் துயரங்கள் பற்றி பேசுவதற்கு பாஜக தயாராக இல்லை.

அவர்களுக்கு அதானி அம்பானி பற்றி மட்டும் தான் கவலை. பொதுமக்கள் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை. புதிதாக கொண்டு வரப்பட்டு இருக்கும் சட்டத்தினால் வெங்காயம் மட்டுமில்லை மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரிக்கும். இங்கு யாரும் பொருளாதார வீழ்ச்சியை பெரிதாக கருதுவதில்லை கச்சா எண்ணையின் விலை உலக அளவில் குறைந்து வருகிறது. ஆனால் எட்டாவது அதிசயம் போது போன்று பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை இந்தியாவில் மட்டும் அதிகரித்து வருகிறது.

விவசாயிகளையும் மக்களையும் சந்திப்பதற்கு நேரமில்லாத பிரதமருக்கு நடிகைகளை சந்திக்க மட்டும் அதிக நேரம் உள்ளது. என்ன காரணத்திற்காக பாரதிய ஜனதாவிற்கு குஷ்பு சென்றார் என எங்களுக்கு தெரியாது. அதுகுறித்து எந்த கவலையும் எங்களுக்கு இல்லை. பாரதிய ஜனதாவின் தலைமை இடமாக ஆளுநர் அலுவலகம் செயல்படுகின்றது. தமிழக முதல்வர் தன்னை விவசாயி என்று முன்னிலைப்படுத்தும் போது வேளாண் சட்டத்தை ஆதரித்தது ஏன்?” என்ற கேள்வியை எழுப்புகிறார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |