குழந்தைகள் அதிகம் பயன்படுத்தும் மூன்று செயலிகளை கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது
கூகுள் நிறுவனம் தனது வரைமுறைகளை மீறி தகவல்களை திருடும் செயலிகளை அவ்வப்போது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கும். சமீபத்தில் முக்கிய டிஜிட்டல் பணப்பரிமாற்றமாக இந்தியாவில் செயல்பட்டு வந்த பேடிஎம் கூட ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தைகள் அதிகமாக பயன்படுத்தும் மூன்று செயலிகள் கூகுள் நிறுவனத்தால் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. நம்பர் கலரிங், பிரின்சஸ் சலூன் மற்றும் கேட்ஸ் அண்ட் காஸ்பிளே ஆகிய மூன்று செயலிகளையும் அதிரடியாக ப்ளே ஸ்டோரில் இருந்து அந்நிறுவனம் அகற்றியுள்ளது.
இரண்டு கோடிக்கும் அதிகமான டவுன்லோடு இந்த செயலிகள் பெற்றுள்ள நிலையில் நீக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. சர்வதேச டிஜிட்டல் தணிக்கை கவுன்சில் மேற்கொண்ட ஆய்வில் கூகுள் வகுத்திருக்கும் பாலிசிகளை மீறி சிறுவர் சிறுமிகள் மற்றும் குழந்தைகளின் ஆண்ட்ராய்ட் ஐடி போன்ற பல தரவுகளை இந்த செயலிகள் சேகரித்து கசிய செய்துள்ளது இதனை கண்டறிந்த கவுன்சில் கூகுள் நிறுவனத்திற்கு தெரியப்படுத்த அதிரடியாக ப்ளே ஸ்டோரில் இருந்து மூன்று செயல்களும் நீக்கப்பட்டுள்ளது.