Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து வெற்றி இயக்குனர்களுடன் கை கோர்க்கும் தனுஷ்…எதிர் பார்ப்பில் ரசிகர்கள்…!!!

பல வெற்றி படங்களை தந்த இயக்குனர்களுடன் தனுஷ் கை கோர்ப்பதால் ரசிகர்கள் எதிர் பார்ப்பில் முல்கியுள்ளனர் .

தனுஷ் தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகராக வளம் வருகிறார் .இவர் ஆரம்ப காலத்தில் உருவத்தை  வைத்து மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டு வந்தனர்.ஆனால் அதனை உடைத்து எரித்து, தமிழ் மற்றும்  ஹிந்தியிலும் பல வெற்றி படங்களில் நடித்து சாதனை படைத்து,  இந்திய சினிமாவின்  தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார். தற்போது இவரின் நடிப்பில்  ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய படங்கள் வெளியாக காத்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படங்களுக்கு பின் அடுத்தடுத்து பல வெற்றி இயக்குனர்களுடன் கைகோர்த்து பிரபமாண்ட படங்களில் நடிக்க இருக்கிறார்.  தனுஷின் 43 வது படமாக கார்த்திக் நரேன், 44 படமாக மித்ரன் ஜவகர் , 45  படமாக  ராட்சசன்  இயக்குனர் ராம் குமார், 46  படமாக ராக்கி  இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ,47  படமாக வெற்றி மாறன் என அடுத்தடுத்து  பட்டியல் நீள்வதால் ரசிகர்கள் பெரும் எதிர் பார்ப்பில் உள்ளனர்.

 

Categories

Tech |