கடந்த நள்ளிரவு 12 மணி முதல் சென்னை பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
சென்னையில் குறிப்பா தாழ்வான பகுதிகளில் சென்னை கேகே நகர், கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால் ஆங்காங்கே வந்து மழை நீர் வெள்ளமாக காட்டாற்று வெள்ளமாக இருக்கிறது. இந்த கேகே நகர் மெட்ரோ வாட்டர் பகுதி இந்தப் பகுதியில நள்ளிரவு முதல் கனமழை பெய்து வந்ததால் இங்கு வந்து பெரும்பாலான இடங்களில் வெள்ளக்காடாக இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் கோயம்பேடு, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் வடசென்னையில் ராயபுரம், திருவிக நகர் பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்பதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்திருக்கிறது. வாகனங்களும் பழுதாகி நிற்பதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சென்னை மாவட்டம் மட்டுமில்லாமல் பகுதிகளான ஆலந்தூர், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது.
ஒரு நாள் மழைக்கே மழைநீர் வெள்ளம் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். உடனடியாக இந்த பகுதிகளில் பல பகுதிகளில் தேங்கி இருக்கும் மழை நீரை மாநகராட்சி உடனடியாக தீர்க்க வேண்டும் என்றார்கள். அது மட்டும் இல்லாமல் காலை 5 மணி முதல் 8 மணி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த மழைநீர் வந்து இன்னும் அதிகரிக்க கூடிய சூழ்நிலையில் இருக்கு. பல பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் அதிகாரிகள் வந்து பார்க்க முடியாத சூழ்நிலையில் ஆங்காங்கே வந்து பொதுமக்கள் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
நள்ளிரவு 12 மணி வரை பலத்த மழை பெய்ய தொடங்கியதால் எல்லா இடங்களிலும் மழையால் பெரிய பாதிப்புகளை சந்திக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் பல பகுதிகளில் மழைநீர் வந்து இரண்டு அடி தூரத்திற்கு ஆழத்திற்கு வந்து இருப்பதினால் பொதுமக்கள் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.