Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

அய்யய்யோ….! ”வெளிய போகாதீங்க ப்ளீஸ்” – மக்களே அலெர்ட் …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக நேற்றைய தினம் வானிலை ஆய்வு மையம் அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்தது. அதன் தாக்கம் காரணமாகவும்,  தென்மேற்கு வங்கக்கடலில் இருக்கக்கூடிய மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தற்போது தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை. காஞ்சிபுரம். திருவள்ளூர். விழுப்புரம். ராணிப்பேட்டை. திருநெல்வேலி. தென்காசி. விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை முதலே சென்னையில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் தற்போது 8 மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. மஞ்சள் எச்சரிக்கை பொறுத்தவரை ஒரு சில பகுதிகளில் மட்டும் அதிக மழை பெய்யும் , சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |