தமிழகத்தில் 22 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. நேற்றும், இன்றும் என பல பகுதிகளில் நடந்து வரும் சோதனையில் இதுவரை 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்து இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. கணக்கில் வராத 5 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கட்டுக்கட்டாக கைப்பற்றபட்டு இருக்கின்றது. மேலும் 150 கோடி கணக்கில் காட்டாத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.