காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு-காஷ்மீரில் புட்கேம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர்கள் பதுங்கி இருந்த பகுதியை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது வீரர்கள் மீது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையும் பதில் தாக்குதல் நடத்தியது.
4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் விழ்த்தப்பட்டனர். இவர்கள் எந்த தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது பற்றி விசாரணை நடத்தப்படுகிறது. இவர்களில் ஒருவன் வெளிநாட்டை சேர்ந்தவர் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.