Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி – கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மழை

தூத்துக்குடி கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழை மானாவாரி விவசாயத்திற்கு உகந்தது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டயபுரம் படர்ந்தபுளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. புதுக்கோட்டை முத்தையாபுரம் முள்ளக்காடு போன்ற பகுதிகளில் இரவு 9 மணியில் இருந்து சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

பலத்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் இந்த பருவமழை மானாவாரி விவசாயத்திற்கு உகந்தது என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |