Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! யோகம் உண்டாகும்…! சுமை குறையும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்றையநாள் யோகமான நாளாக இருக்கும்.

கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். கடன் சுமை குறையும். அன்னிய தேச பயணம் செல்ல போட்ட திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல்கள் வந்துச்சேரும். இன்று எல்லா பிரச்சனைகளும் சரியாகும். முயற்சிகளும் நல்ல வெற்றியைக் கொடுக்கும். எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. அனைத்துக் காரியங்களிலும் அனுகூலம் உண்டாகும்.

முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். இன்று உறவினர்களின் வருகை இருக்கும், இதனால் சிறிது செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். கணவன் மனைவி இருவருக்குமிடையே அன்பு மேலோங்கும். வாக்குவாதங்கள் இல்லாமல் செல்லும்.

இன்றையநாள் முன்னேற்றம் தரும் நாளாகவே இருக்கும், இருந்தாலும் காதலில் உள்ளவர்கள் மட்டும் பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். மாணவ-மாணவியர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எதையும் செய்ய வேண்டியதிருக்கும். பாடத்தை கவனமாக படியுங்கள் அதேபோல் விளையாடும் பொழுது எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும்.

பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், இதனால் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அனுபவிக்கலாம்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |