Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! எண்ணங்கள் நிறைவேறும்…! பிரச்சனை தீரும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும்.

சொத்து பிரச்சனை சுமூகமாக முடியும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்திச்செய்து மகிழ்வீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்துக் கொள்வார்கள். இன்று கூட்டு வியாபாரம் திருப்தியைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் சொல்படி நடந்துக்கொள்வது நல்லது. பணவரவும் திருப்திகரமாக இருக்கும். மேலிடத்தின் கனிவான அனுசரணையால் சந்தோசம் கொள்வீர்கள்.

மனதிலிருந்த இனம் புரியாத குழப்பம் விலகி செல்லும். தூரத்து தேசத்திலிருந்து வரக்கூடிய செய்தி மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதேபோல் தூரதேசம் செல்ல போட்ட திட்டங்களும் முன்னேற்றத்தைக் கொடுக்கும் படியாக இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் வெற்றி வந்துச்சேரும். வசீகரமான தோற்றங்கள் வெளிப்படும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும்.

தொழில் வியாபாரம் புரிபவர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றகரமான நாளாக இருக்கும், ஆனால் பண விஷயத்தில் மட்டும் கவனமாக இருந்துக் கொள்ளுங்கள். வெளிவட்டாரத்தில் சில நபர்களிடம் எச்சரிக்கை நடந்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக அவர்களிடம் பணப்பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே கடைப்பிடியுங்கள்.

பேச்சில் அன்பை மட்டுமே வெளிப்படுத்துங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு, சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மென்மேலும் முன்னேற்றத்தை அனுபவிக்கலாம்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |