நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கியமான கருத்து ஒன்றை வெளியீட்டு இருக்கின்றார்.
கடந்த 26 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு ரஜினிகாந்த் பெயரில் ஒரு அறிக்கை வெளியாகியது. இது சில முக்கியமான நபர்களிடம் இருக்கக்கூடிய வாட்ஸ்அப் குழுவில் மட்டும் பகிரப்பட்டது. அதன் பிறகு ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் அதை பகிர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த கடிதத்தில் தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கி இருக்கிறார் என்றும் தகவல்கள் சொல்லப்பட்டன.
குறிப்பாக தன்னுடைய உடல் நலத்தில் மருத்துவருடைய ஆலோசனை நடத்தியதாகவும் அரசியல் பிரவேசம் குறித்து அவர்களுடன் பேசியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில்,
தன்னுடைய பெயரில் சமூக ஊடகங்களில் பரவுவது தன்னுடைய அறிக்கையை இல்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். ஆனால் தனது உடல்நிலை சரியில்லை என வெளியான தகவல் என்பது உண்மையே என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். மேலும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து பின்பு தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்
— Rajinikanth (@rajinikanth) October 29, 2020