நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என சொல்லாமல் சொல்லியுள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.
கடந்த 26ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் பெயரில் ஒரு அறிக்கை வெளியானது. அது முக்கியமானவர்கள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் மட்டும் பகிரப்பட்டு வந்தது. இதில், கொரோனா தடுப்பூசி வரும் வரை ரஜினி அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என அறிக்கை வெளியானது. உடல்நிலை காரணமாக சுற்றுப்பயணங்கள் தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக அறிக்கையில் இருந்தது.
இந்த நிலையில் நடிகர் ரஜினி, தனது எனது பெயரில் வெளியானது என்னுடைய அறிக்கை இல்லை. ஆனால் உடல்நிலை பற்றிய தகவல் உண்மையே. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாடு தெரிவிப்பேன். எனது பெயரில் ஊடகங்களில் வந்தது எனது அறிக்கை இல்லை ரஜினி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) October 29, 2020
ரஜினியின் இந்த கருத்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இப்போதைய நிலையில் அவர் தேர்தலில் களம் காண்பாரா ? அல்லது தள்ளிப் போடுகிறாரா ? அல்லது கட்சி தொடங்க போவதில்லையா ? என பல கேள்விகள் எழுந்துள்ளது. மேலும், ஒட்டு மொத்தமாக அரசியல் நிலைப்பாடு இல்லாமல், அரசியல் வேண்டாம், தேர்தல் அரசியல் இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு வருகிறாரா ? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
இந்த மூன்று நாட்களாக அவருடைய அறிக்கை சுற்றி வந்தபோது கூட ஏன் மறுக்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இன்றைய அறிக்கையிலும் தன்னுடைய உடல் நிலை குறித்து வெளிப்படையாக அறிவித்து இருப்பதன் மூலமாக அவருடைய அவருடைய உடல்நலம் அவரின் தான் பெரிய பலம் என்பதால் அரசியல் வேண்டாம் என்ற நிலையை ரசிகர்களுக்கு உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை உணர்த்தும் வகையில் அடுத்த வரிகள் உள்ளன. கட்சி தொடர்பாக…. அரசியல் நிலைப்பாடு தொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து முடிவு எடுப்பேன் என ரஜினி தெரிவித்துள்ளார். மேலும் எப்போது கலந்தாலோசிப்பேன்…. டிசம்பர், ஜனவரி என எதையும் குறிப்பிடாமல் ரஜினி குறி இய்ப்பது ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறிய ரஜினி தற்போது அரசியலுக்கு வரமாட்டேன் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார்.