Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்ப இல்லைன்னா… இனி எப்பவுமே இல்லை….. போர் வராது… எழுச்சியும் வராது…. BYE BYE சொன்ன ரஜினி …!!

நடிகர் ரஜினிகாந்த் இனி எப்போதும் அரசியலுக்கு வரமாட்டார் என செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

கடந்த 26 ஆம் தேதி இரவு நடிகர் ரஜினிகாந்த் பெயரில் ஒரு அறிக்கை வெளியாகியிருந்தது. முக்கியமாக சில நபர்கள் இருக்கக்கூடிய வாட்ஸ்அப் குழுவில் மட்டும் இது பரவியது. இதையடுத்து ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பகிர்ந்து வந்தனர். அந்த அறிக்கையில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை அரசியலுக்கு வர மாட்டேன். மருத்துவர்கள் என்னுடைய உடல்நிலை சார்ந்து கவனிக்க சொன்னார்கள் என அறிக்கையில் இருந்தது. இந்த நிலையில் ரஜினி அந்த அறிக்கை என்னுடையது அல்ல. ஆனால் உடல்நிலை தகவல் உண்மை என ட்விட் செய்துள்ளார்.

இதையடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது கிடையாது என அரசியல் விமர்சகர்கள் எல்லாரும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 27 ஆம் தேதி அறிக்கை உலா வந்து கொண்டிருந்தது. 27, 28 ஆகிய 2 நாட்கள் கழித்து 29ஆம் தேதி கிட்டத்தட்ட எல்லா பத்திரிகைகளிலும் வெளியாகி அத்தனை பேரும் படிப்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்து விட்டு  ரஜினி இனிமேல் அரசியலுக்கு வருவது அரிதிலும் அரிது என்ற ஒரு எண்ண ஓட்டம் உருவான பிறகு திடீரென்று ரொம்ப தாமதமாக ரஜினி ட்விட் பதிவிட்டுள்ளார்.

அறிக்கை என்னுடையது இல்லை என்றால், இந்த அறிக்கையை யாரும் நம்ப வேண்டாம் என்று ரஜினி தெரிவித்து இருக்கலாம். இல்லை அதனை மறுத்து இருக்கலாம்….  நம்ப வேண்டாம்… என்று சொல்லி இருக்கலாம்…. என்னுடைய அறிக்கை இல்லை…. ஆனால் அதிலிருக்கும் யாவும் உண்மை அப்படி என்று சொல்வது என்ன அர்த்தம். மேலும் நிர்வாகிகளுடன் கலந்து பேசி என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என்று சொல்லியுள்ளார்.அவர் ஏற்கனவே ஒரு அரசியல் நிலைப்பாட்டை எடுத்து விட்டார்.

கடந்த 2017 டிசம்பர் 31 அரசியலுக்கு வருவேன். கட்சி அமைப்பேன் அதுதான் அவர் கடைசியாக எடுத்த ஒரு அரசியல் நிலைப்பாடு. இனிமேல் புதிதாக என்ன அரசியல் நிலைப்பாடு எடுக்க முடியும். அப்படி எடுத்தால் நான் அரசியலுக்கு வரவில்லை என்பதாகத்தான் இருக்கும் முடியும். அதனால் அரசியலுக்கு ரஜினி வரமாட்டார். அப்படிங்கிற ஒரு மனநிலையை கிட்டத்தட்ட எல்லோரிடமும் தோற்றுவிக்கக் கூடிய விளையாட்டை ரஜினி ரொம்ப தெளிவா பிளான் பண்ணி நடத்தி இருக்காரு.

அவரு தான் அரசியலுக்கு வருவார் என்று உறுதியாக நம்பிய ரசிகர்கள் அந்த  மனநிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டே வரவேண்டும் என்று ரொம்ப ஏமோஷனல் அட்டச்மெண்ட் கொடுத்து இருக்கின்றார். இனி கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களை சரி செய்து கொண்டு வருகிறார். ஒரு ஸ்டேஜ்ல உடைத்து   சொல்வார்… நான் இனிமேல் அரசியலுக்கு வரவில்லை. இனி இதற்கு இது தான் காரணம் என்று சொல்வார் அவ்வளவுதான்.. மொத்தத்தில் ரஜினி இனி எப்பவுமே இல்லை.

Categories

Tech |