சென்னையில் நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது 1,529 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 884 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சோழவரம் ஏரியின் நீர் தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில் 128 மில்லியன் கனஅடி இருப்பு உள்ளது. 116 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
புழல் ஏரி நீர் தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடியில் 2,094 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 971 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 115 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடியில் 2182 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 460 கன அடியாக உள்ளது. குடிநீருக்காக தண்ணீர் திறந்து விடப்படுவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.