Categories
தேசிய செய்திகள்

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தான் கொல்லப்பட்டிருக்கலாம்…!!

பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பாதுகாப்பற்ற சூழலை உணர்ந்ததாகவும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தான் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் நடிகை அமீஷா பட்டேல் திடுக்கிடும் தகவலை கூறி உள்ளார்.

பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் சமீபத்தில் பிஹாரில் சட்டமன்றத் தேர்தலில் லோக் ஜன சக்தி கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்தார். அப்போது தனது உயிருக்கு ஆபத்து இருந்தது எனக் கூறியுள்ளார். தனக்கு கொலை மிரட்டல் இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் டாக்டர் பிரகாஷ் சந்திராவுடன் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது அவர் தன்னை மிரட்டினார் என்றும் மும்பைக்கு செல்வதற்கான விமானத்தை பிடிக்க விடாமல் அவர் தடுத்து உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

டாக்டர் பிரகாஷ் ஒரு குண்டரை போல் செயல்பட்டதாகவும், அவரது அடியாட்களால் தான் மிரட்டப் படுவதாகவும் அமீஷா பட்டேல்  பரபரப்பு தகவலை பதிவிட்டுள்ளார். தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் நடிகை அமீஷா பட்டேல் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |