Categories
உலக செய்திகள்

கிம்முடன் இருப்பது யார்….? சகோதரியை ஒதுக்கிவிட்டாரா….? எழும் கேள்விகள்…!!

வடகொரிய அதிபர் கிம்முடன் புதிதாக பெண்ணொருவர் வருவதால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

கிம் ஜாங் உன்னுடன் அதிகாரப்பூர்வ பயணங்களில் புதிதாக பெண்ணொருவர் தென்படுகிறார். அவரது பெயர் ஹாயோங் ஜான். கிம்மின் முன்னாள் காதலியான இவர் பிரபல பாப் பாடகி . முன்பு நிகழ்ச்சிகளில் கிம்முடன்  அவரது சகோதரி கிம் ஜாங் இருப்பார். ஆனால் தற்போது அவரை காணவில்லை என்பதால் இந்த பாப் பாடகி தான் கிம் சகோதரியின் இடத்தை பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினர்களை அழைத்து செல்வது கிம்முக்கு கொடுக்கப்படும் மலர்களை வாங்கி வைப்பது போன்ற பணிகளை செய்து வந்த கிம் யோ ஜாங்க்கு பதிலாக இந்த புதிய பெண் அனைத்தையும் செய்திருக்கிறார். கிம்மின் சகோதரி தனியாக அமர்ந்திருந்தார் என டைம்ஸ் பத்திரிக்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிபர் கிம்முக்கு பிறகு அவரது சகோதரி ஆட்சியை ஏற்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் ஒதுங்கி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கிம்மின் மனைவியும் சில தினங்களாக யார் கண்ணிலும் தென்படாததால் அவர் கர்ப்பமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |