Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 30…!!

அக்டோபர் 30  கிரிகோரியன் ஆண்டின் 303 ஆம் நாளாகும்.

நெட்டாண்டுகளில் 304 ஆம் நாள்.

ஆண்டு முடிவிற்கு மேலும் 62 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

637 – அந்தியோக்கியா ராசிதீன் கலீபாக்கள் தலைமையிலான முசுலிம் படையினரிடம் வீழ்ந்தது.

758 – குவாங்சோவை அரபு, பாரசீக கடற்கொள்ளையர் கைப்பற்றினர்.

1270 – சிசிலியின் முதலாம் சார்லசிற்கும் தூனிசின் சுல்தானுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் எற்பட்டதை அடுத்து 8-வது சிலுவைப் போரும் தூனிசு மீதான முற்றுகையும் முடிவுக்கு வந்தன.

1485 – ஏழாம் என்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.

1502 – வாஸ்கோ ட காமா இரண்டாவது தடவையாக கோழிக்கோடு வந்தார்.

1657 – எசுப்பானியப் படைகள் யமேக்காவை மீளக் கைப்பற்றுவதில் தோல்வி கண்டது.

1817 – வெனிசுவேலாவில் சுதந்திர அரசொன்றை சிமோன் பொலிவார் அமைத்தார்.

1831 – ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த நாட் டர்னர் வர்ஜீனியாவில் கைது செய்யப்பட்டார்.

1863 – டென்மார்க்கு இளவரசர் வில்லெம் முதலாம் ஜார்ஜ் என்ற பெயரில் கிரேக்க மன்னராக முடிசூடும் நோக்குடன் ஏதென்சை சென்றடைந்தார்.

1864 – தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஹெலேனா குடியேற்ற நாடு நிறுவப்பட்டது.

1905 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசு முதலாவது அரசியலமைப்பை அறிவித்து பிரதிநிதிகள் அவையை நிறுவினார். (இது யூலியன் நாட்காட்டியில் அக்டோபர் 17 இல் இடம்பெற்றது).

1918 – உதுமானியப் பேரரசு கூட்டுப் படைகளுடன் உடன்பாட்டுக்கு வந்ததில் மத்திய கிழக்கில் முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

1920 – அவுஸ்திரேலியக் கம்யூனிஸ்ட் கட்சி சிட்னியில் அமைக்கப்பட்டது.

1925 – ஜான் லோகி பைர்டு பிரித்தானியாவின் முதலாவது தொலைக்காட்சி ஒளிபரப்பியை அமைத்தார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதிய கடன்-குத்தகை ஒப்பந்தத்தில் வழங்க பிராங்க்ளின் ரூசவெல்ட் ஒப்புதல் வழங்கினார்.

1941 – மேற்கு உக்ரைனில் 1,500 யூதர்கள் நாசிகளினால் பெல்செக் வதைமுகாமிற்கு அனுப்பப்பட்டனர்.

1945 – இந்தியா ஐநாவில் இணைந்தது.

1947 – உலக வணிக அமைப்பை ஏற்படுத்துவதற்கு முன்னோடியாக கட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம் நிறுவப்பட்டது.

1953 – பனிப்போர்: பொதுவுடைமைவாதிகளுக்கு எதிரான போரில், அணு ஆயுதங்களை அபிவிருத்தி செய்வதற்கான உத்தரவில் அமெரிக்கத் தலைவர் டுவைட் டி. ஐசனாவர் கையெழுத்திட்டார்.

1960 – முதலாவது வெற்றிகரமான சிறுநீரகக் கொடை ஐக்கிய இராச்சியத்தில் அளிக்கப்பட்டது.

1961 – சோவியத் ஒன்றியம் 50 மெகாதொன் அளவுள்ள சார் வெடிகுண்டு என்ற அணுகுண்டை வெடிக்க வைத்தது. இதுவே இந்நாள் வரை வெடிக்கப்பட்ட மிகப்பெரிய அணுகுண்டாகும்.

1961 – ஜோசப் ஸ்டாலினின் உடல் மாஸ்கோவின் கிரெம்லினில் லெனின் நினைவகத்தில் இருந்து அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டது.

1964 – இலங்கையின் மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

1970 – வியட்நாமில் இடம்பெற்ற பெரும் வெள்ளம் காரணமாக 293 பேர் உயிரிழந்து, 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.

1973 – ஐரோப்பாவையும் ஆசியாவையும் பொசுபோரசு நீரிணைக்கு மேலாக இணைக்கும் பொசுபோரசு பாலம் துருக்கியின் இசுதான்புல் நகரில் அமைக்கப்பட்டது.

1983 – ஏழாண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் அர்கெந்தீனாவில் முதற்தடவையாகத் தேர்தல் இடம்பெற்றது.

1985 – சாலஞ்சர் விண்ணோடம் தனது கடைசி வெற்றிகரமான பயணத்தை ஆரம்பித்தது.

1993 – வட அயர்லாந்து, கிரேசுடீன் என்ற இடத்தில் ஆலோவீன் விழா ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

1995 – கனடாவில் இருந்து பிரிந்து செல்ல கியூபெக் மாநிலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு 50.6% to 49.4% என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.

2001 – இலங்கைப் பிரதமர் பேசவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் இறந்தனர், 15 பேர் காயமடைந்தனர்.

2006 – ஜெனீவாவில் விடுதலைப் புலிகளிக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன.

2014 – பாலத்தீன நாட்டை சுவீடன் அங்கீகரித்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பாலத்தீனத்தை அங்கீகரித்த முதல் நாடு இதுவாகும்.

2015 – உருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 64 பேர் உயிரிழந்தனர், 147 பேர் காயமடைந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1632 – கிறிஸ்டோபர் ரென், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர், கட்டிடக் கலைஞர் (இ. 1723)

1735 – ஜான் ஆடம்ஸ், அமெரிக்காவின் 2வது அரசுத் தலைவர் (இ. 1826)

1885 – எஸ்ரா பவுண்ட், அமெரிக்கக் கவிஞர் (இ. 1972)

1896 – ஹேரி ஆர். ட்ரூமன், அமெரிக்கப் போர் வீரர் (இ. 1980)

1898 – இராய. சொக்கலிங்கம், தமிழறிஞர் (இ. 1974)

1908 – முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1963)

1909 – ஓமி பாபா, இந்திய-பிரெஞ்சு இயற்பியலாளர் (இ. 1966)

1916 – லா. சா. ராமாமிர்தம், தமிழக எழுத்தாளர் (இ. 2007)

1932 – பருண் டே, இந்திய வரலாற்றாளர் (இ. 2013)

1936 – ஏ. ஆர். எம். அப்துல் காதர், இலங்கை அரசியல்வாதி

1941 – தியோடர் வொல்ப்காங் ஹான்ஸ், நோபல் பரிசு பெற்ற செருமனிய இயற்பியலாளர்

1942 – சமல் ராஜபக்ச, இலங்கை அரசியல்வாதி

1953 – சார்லஸ் மார்டின் ஸ்மித், அமெரிக்க நடிகர், இயக்குநர்

1960 – டீகோ மரடோனா, எர்ச்செந்தீனக் கால்பந்து வீரர்

1962 – கொட்னி வோல்சு, யமேக்கத் துடுப்பாளர்

1966 – கே. வி. ஆனந்த், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர்

1972 – புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, ஈழத்து அரசியல் ஆய்வாளர் (இ. 2009)

இன்றைய தின இறப்புகள்

1883 – தயானந்த சரசுவதி, இந்திய மெய்யியலாளர் (பி. 1824)

1910 – ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்தவர் (பி. 1828)

1963 – முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1908)

1969 – அனந்தராம தீட்சிதர், தமிழக சமய சொற்பொழிவாளர் (பி. 1903)

1972 – பதே சிங், சீக்கிய சமய, அரசியல் தலைவர் (பி. 1911)

1973 – ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (பி. 1902)

1974 – பேகம் அக்தர், இந்தியப் பாடகி, நடிகை (பி. 1914)

1979 – சுபத்திரன், இலங்கையின் முற்போக்கு இலக்கிய கவிஞர் (பி. 1935)

1990 – வி. சாந்தாராம், இந்திய நடிகர், இயக்குநர் (பி. 1901)

1994 – சுவரண் சிங், இந்திய அரசியல்வாதி (பி. 1907)

1997 – சுந்தர சண்முகனார், புதுவைத் தமிழறிஞர் (பி. 1922)

1999 – சௌமியமூர்த்தி தொண்டமான், இலங்கை மலையகத் தமிழர்களின் அரசியல், தொழிற்சங்கத் தலைவர் (பி. 1913)

2007 – லா. சா. ராமாமிர்தம், தமிழக எழுத்தாளர் (பி. 1916)

2009 – பொ. மோகன், இந்திய அரசியல்வாதி (பி. 1949)

2010 – ஆரி முலிச், டச்சுக் கவிஞர் (பி. 1927)

இன்றைய தின சிறப்பு நாள்

விடுதலை நாள் (சிலோவாக்கியா)

தேவர் செயந்தி (முக்குலத்தோர் சமூகம்)

Categories

Tech |