Categories
தேனி மாநில செய்திகள்

மருத்துவம் படிக்கவில்லை…. மனநல சிகிச்சை…. போலி டாக்டரை தூக்கி சென்ற போலீஸ்….!!

மருத்துவம்  படிக்கலாம் சிகிச்சைமையம் நடத்திய போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் அருகே உள்ள போடி மேலத்தெருவை சேர்ந்தவர் அப்பாஸ். இவர் சன் மனநல மறுவாழ்வு மையம் என்ற பெயரில் தேனி என் ஆர் டி நகர் கஸ்தூரிபாய் தெருவில் மருத்துவ சிகிச்சை மையம் நடத்தி வருகின்றார். இவர் முறையான மருத்துவப் படிப்பு படிக்காமல் போலியான சான்றிதழ்களை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து வந்ததாக மாவட்ட கலெக்டருக்கு புகார் சென்றது .

இது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனருக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டிருந்தார்.
இதன்பேரில் விசாரணை மேற்கொண்டதில் போலியான  அடையாள அட்டை மற்றும் போலியான மருந்து சீட்டுகளை அப்பாஸ் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து  போலி அடையாள அட்டை மருத்துவச் சீட்டு மற்றும் அங்கு சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட  மருந்து, மாத்திரைகள்,  ஊசி என பலவற்றை மருத்துவ குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர்.  பிறகு  தேனி போலீஸ்  நிலையத்தில் இணை  இயக்குனர் டாக்டர் லட்சுமி மேனன் இது குறித்து புகார் செய்துள்ளார்.

புகாரை ஏற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து போலி டாக்டரை  கைது செய்தரர் . பிறகு அவரைத் தேனி  ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி விருதுநகர் மாவட்ட சிறையில் அடைத்துள்ளனர். இவர் ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு கள்ளநோட்டு வழக்கில் தேனி போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |