இரத்தம் வதக்கல் செய்ய தேவையான பொருட்கள்:
ஆட்டின் ரத்தம் – 200 கிராம்
எண்ணெய் – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 4
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
தேங்காய் – அரை மூடி
வெங்காயம் – 50 கிராம்
கருவேப்பிலை, உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஆட்டின் ரத்தம் உறைந்து இருப்பதால் அதில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். ரத்தத்தை பிசையும் போது அதில் சிறு சிறு உருண்டைகளாக திரைந்து வரவும், அதிலுள்ள தண்ணீரை வடித்து விடவும்.
பின்பு வெங்காயம், பச்சை மிளகாயை சிறுதுண்டுகளாக நறுக்கி கொள்ளவும். தேங்காயை பாத்திரத்தில் துருவி எடுத்து கொள்ளவும் .
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை போட்டு நன்றாக வதங்கியதும், அதனுடன் வடிகட்டிய இரத்தத்தையும் சேர்த்து கொள்ளவும்.
அதனை தொடர்ந்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறியபின் இறக்கவும். இறுதியில் தேங்காய்ப்பூ போட்டு பரிமாறினால் சுவையான ரத்தம் வதக்கல் ரெடி. இதனை தனியாகவும் சாப்பிடலாம், இட்லியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.