நெல்லையில் பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடந்த சில தினங்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இருந்த போதிலும் நெல்லையில் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நெல்லையில் மாநகர பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. நெல்லை சந்திப்பு கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Categories