திருவள்ளூர் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரொக்கப்பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு இடைத்தரகர்கள் மூலம் அதிகாரிகள் லஞ்சம் பெறப்படுவதாக சென்னை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார் வந்தன. இதையடுத்து DSP. நவகுமார் தலைமையிலான தனிப்படையினர் அங்கு நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக 5 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையில் கணக்கில் வராத 46 ஆயிரத்து 170 ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்காக பரிந்துரை செய்யப்போவதாக தெரிவித்தனர்.