முட்டை அவியல் செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை – 4
மிளகு – 2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
கருவேப்பிலை – சிறிது
செய்முறை:
அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி அதனுடன் முட்டைகளை சேர்த்து சில நிமிடங்கள் நன்கு கொதிக்கவிடவும். முட்டை நன்றாக வெந்ததும் எடுத்து தோலை உரித்து, அதன் நடுவில் கீறி கொள்ளவும்.
பின்பு மிக்சி ஜாரில் மிளகு, சீரகம், உப்பு சேர்த்து தூளாக்கி எடுத்து கொள்ளவும். அதனை முட்டையின் கீறிய இடத்தில் வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கருவேப்பிலை சேர்த்து அதில் கீறி வைத்த மூட்டைகளைப் போட்டு புரட்டி எடுக்கும் போது முட்டையானது இரண்டாகி விடாமல் பார்த்து எடுத்து பரிமாறினால் சுவையான முட்டை அவியல் ரெடி.