தமிழகத்தில் கலவர அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் வேல் யாத்திரை என்கிற பெயரில் பாஜக கலவரத்திற்கு திட்டமிட்டு இருக்கிறது என்றும் தங்கள் கலவர அரசியலை மறைத்து மக்களை ஏமாற்றவே வேல் யாத்திரை என பெயரிட்டிருக்கிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா காலத்தில் 100 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த யாத்திரை நடத்த அனுமதிதால் பாஜக விஷம் கலந்த பிரச்சாரத்தோடு கொடிய நோயையும் பரப்புவதற்கு அது வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நோய் பேரிடர் கால கட்டுப்பாடுகளை மீறி கலவர அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் இந்த வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.