Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பா.ஜ.க. நிர்வாகிகள் 3 பேர் சுட்டுக்கொலை …!!

காஷ்மீரில் பாஜக நிர்வாகிகள் 3 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் குல்கா மாவட்டம் வைக்கபூரா பகுதியை சேர்ந்த உமர் ரஷ்யத் பேக் குல்கா மாவட்ட பாஜக கட்சியின் இளைஞர் அணி பொதுச் செயலாளராக பணியாற்றி வந்தார். உமர் ரஷ்யத் அப்குதியை சேர்ந்த உமர் ரம்சிம் அஜிம் மற்றும் பீடா அசம் யாத்து ஆகியவறுடன் ஒய் கேப் பூறா பகுதியில் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் சென்ற காரை இடைமறித்து தீவிரவாதிகள் பாஜக நிர்வாகிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடந்த பகுதிக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த பாஜக நிர்வாகிகள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தாக்குதல் நடந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |