கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு இல்லை என சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்காக கொரோனாவிற்கு பிந்தைய ஒருங்கிணைந்த கவனிப்பு மையம் சேலம் அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கி வைத்தார். இதில் கொரோனா இருந்து என்பது குணமடைத்தவர்களுக்கு சுவாச பயிற்சி, உணவு முறை, உளவியல் அறிவுரைகள் வழங்கப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு எதுவும் இல்லை என தெரிவித்தார். பின்னர் உலக ஸ்டோக் விழிப்புணர்வு தினத்தை ஒட்டி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை மாவட்ட ஆட்சியர் ராமன் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் மீது மற்றும் மருத்துவர்கள் வெளியிட்டனர்.