புலித்தேவன் வேலு நாச்சியார் மருது பாண்டியர்கள் வரலாறு மறைக்கப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் வரலாற்று ஆய்வாளரும் வேத பேரவையின் தலைவருமான வேத தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களில் புலித்தேவன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆகியோர் வாழ்க்கை வரலாறும் அவர்களின் சாதனைகளையும் விவரிக்கும் புத்தகங்கள் கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெறவில்லை என குற்றம் சாட்டினார்.
இதனால் விடுதலைக்கு பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் சாதனைகள் அடுத்த சந்ததியினருக்கு தெரியாமலேயே போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனைப் பகிர்ந்த அவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.