Categories
மாநில செய்திகள்

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை …!!

வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாஸ் சாகு ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் சூழலில் அதற்கான தயாரிப்பு பணிகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் நவம்பர் 16-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது. இந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாஸ் சாகு ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் இரட்டை பதிவுகள் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்கம் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்களை நடத்துவது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Categories

Tech |