Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காய்கறி நூடில்ஸ்…ஈஸியா செய்ய…ஒரு வழி…!!

காய்கறி நூடுல்ஸ் செய்ய தேவையான பொருட்கள்: 

நூடில்ஸ்                                    – ஒரு பாக்கெட்
கோஸ், பீன்ஸ், பட்டாணி – தலா 100
குடமிளகாய்                            – 2
இஞ்சி                                          – சிறு துண்டு
பச்சை மிளகாய்                    – 3
மிளகாய் தூள்                          – ஒரு ஸ்பூன்
கேரட்                                           – 150
பெரிய வெங்காயம்             – மூன்று
பூண்டு                                         – 10 பல்
சீரகத்தூள்                                 – ஒரு டீஸ்பூன்
மிளகுத் தூள்                            – அரை டீஸ்பூன்

செய்முறை:

நூடுல்சுடன் உப்பு சேர்த்து, எண்ணெய் சிறிது விட்டு வேகவைத்த்தபின், பச்சை தண்ணீரில் அலசி வடிகட்டி வைக்கவும்.

அடுப்பில் சட்டி வைத்து எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, பட்டை, கிராம்பு, வடிகட்டின நூடில்ஸ், வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, பாதியில் குடைமிளகாய், கருவேப்பிலை, காய்களையும் போட்டு நன்றாக சுண்ட வதக்கி இறக்கவும்.இப்போது சுவையான காய்கறி நூடில்ஸ் தயார்.

Categories

Tech |