இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளும் (2020) நவம்பர் மாதத்தில் 8 நாட்கள் விடுமுறை பெறவுள்ளது. வங்கிகள் பொதுவான விடுமுறை நாட்களில் மூடப்படுவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவில் நவம்பர் மாதம் தீபாவளி , குரு நானக் ஜெயந்தி போன்ற முக்கிய பண்டிகைகள் இருக்கும் காரணத்தால் பொது விடுமுறைகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
நவம்பர் 2020-ல் வங்கி விடுமுறை நாட்களில் 5 ஞாயிற்றுக்கிழமைகளும் 2-சனிக்கிழமைகளும் அடங்கும். நாட்டில் வங்கி விடுமுறைகளும் அவை அமைந்துள்ள மாநில விடுமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை.
நவம்பர் 1 – ஞாயிறு
நவம்பர் 14 – இரண்டாவது சனி / தீபாவளி
நவம்பர் 15 – ஞாயிறு
நவம்பர் 22 – ஞாயிறு
நவம்பர் 28 – நான்காவது சனி
நவம்பர் 29 – ஞாயிறு
நவம்பர் 30 – குரு நானக் ஜெயந்தி
வங்கிகள் மூடப்பட்டிருக்கும் நாட்களில் மக்கள் ஆன்லைன் / இணைய வங்கி வசதிகளைப் பயன்படுத்தலாம்.