கொரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட தடைகள் சீனாவின் ஊகான் நகரில் நீக்கப்பட்டதை தொடர்ந்து அந்நகருக்கு இந்தியா இன்று முதல் வந்தே பாரத் விமானத்தை இயக்குகிறது.
சீனாவின் ஊகான் நகரில் கடந்த டிசம்பர் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அங்கு தொற்று முழுவதுமாக அகற்றப்பட்டு தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து உகான் நகருக்கு இந்தியா வந்தே பாரத் விமானத்தை இன்று முதல் இயக்குகிறது.
டெல்லி உகான் விமான பாதையில் வந்தே பாரத் விமானம் இயக்கப்படும் என்றும் சீனாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியர்களை மீட்க சீனாவிற்கு அனுப்பப்படும் ஆறாவது விமானம் இதுவாகும். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.