Categories
உலக செய்திகள்

கோமாளியான சுகாதாரத்துறை அதிகாரி…. வெளியான வைரல் காணொளி….!!

சுகாதாரத்துறை அதிகாரி கோமாளி வேடமிட்டு அறிக்கையை வெளியிட்டது காணொளியாக வைரலாகி வருகிறது

அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாநிலத்தின் சுகாதாரத்துறை அதிகாரி வித்யாசமாக கொரோனா அறிவிப்பை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரேகான் மாநிலத்தில் பெண் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் மஞ்சள் நிற பேண்ட், புள்ளி வைத்த கருப்பு நிற சட்டை, சிவப்பு நிறத்தில் டை அணிந்துகொண்டு கோமாளி போன்று முகத்தில் கலர் பூசிக்கொண்டு கொரோனா அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் கூறுகையில் “இன்றைய நிலவரப்படி 38,160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 390 பேர் இன்று மட்டும் புதிதாக தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள். அதோடு  இன்று கொரோனாவால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 608 ஆக அதிகரித்துள்ளது” என காணொளி மூலம் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு தனது முக கவசத்தை அணிந்து கொள்கிறார். கோமாளி வேடத்தில் அதிகாரி வெளியிட்ட அறிவிப்பு காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் இந்த காணொளிக்கு பலர் ஆதரவு தெரிவித்தும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |