நாளை வானில் நீல நிலவு (புளூ மூன்) தோன்றும் அரிதான நிகழ்வு ஒன்று நடக்க உள்ளது. இந்த நிகழ்வு 2 அல்லது 3 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும். இந்நிலையில் இது நாளை அக். 31-ஆம் தேதி இரவு 8:19 மணிக்கு ஏற்பட உள்ளது. இந்த மாதத்தில் இரண்டாவது பவர்ணமி ஆன நாளை நீல நிலா வானில் தோன்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீல நிலவை நாளை மக்கள் காணலாம்.
இந்த புளூ மூன் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பல பகுதிகளில் தெரியும். இதை புகைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. புளூ மூனை ஸ்மார்ட் போனில் புகைப்படம் எடுத்தால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். டெலிபோட்டோ உதவியுடன் எடுத்தால் நிலவை சற்று பெரிதாக காணமுடியும் என வானியல் கல்வியாளர் ஜெப்பரி ஹண்ட் கூறியுள்ளார். மேலும் அடுத்த நீல நிலவு 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதியும் அதனைத்தொடர்ந்து 2026 மே 31-ந்தேதியும், 2028 டிசம்பர் 31-ந்தேதியும் இது மீண்டும் தோன்ற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.