Categories
தேசிய செய்திகள்

பீகாரில் காங்கிரஸ் பிரச்சார மேடை சரிந்ததால் பரபரப்பு…!!

பீகாரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரச்சாரம் மேற்கொண்டபோது திடீரென மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பீகார் மாநில சட்டப்பேரவைக்கு முதற்கட்ட தேர்தல் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அம்மாநிலத்தின் ஜாலே சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மகசூர் அகமது ரூஸ்வான் தொகுதிக்குட்பட்ட தர்பங்காவில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரக் கூட்டத்தில்  வாக்கு கேட்டு உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மேடை சரிந்து விழுந்தது. இதில் மகசூர்  உட்பட கட்சித் தொண்டர்கள் பலரும் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |