Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! மகிழ்ச்சி கூடும்…! ஆரோக்கியம் சீராக இருக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்று எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபடும் முன்பு தயக்கம் ஏற்பட்டு பின்னர் தெளிவு பிறக்கும்.

குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன்-மனைவிக்கிடையே எதையும் பேசி தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இழுபறியாக இருந்த காரியங்கள் நல்ல முடிவு கொடுப்பதாக இருக்கும். உடல்நிலை சீராக இருக்கும். தேவையான பணவசதியும் கிடைக்கும். இன்று தொழிலை விரிவாக்கும் முயற்சிகள் நல்லபலனைக் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பயணம் செல்ல வேண்டியதிருக்கும்.

சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் தாமதப்பட்டு வந்துச்சேரும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். குழந்தை பாக்கியம் கிட்டும். புதிய வீடு மனை வாங்கக்கூடிய எண்ணங்கள் நிறைவேறும். வாகன யோகம் உண்டாகும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளும் கிட்டும். பெண்களால் முன்னேற்றகரமான சூழல் உண்டாகும்.

வெளிவட்டாரத்தில் உங்களுடைய புகழ் ஓங்கியிருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய எண்ணங்களும் மேலோங்கும். காதலில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்துக் காணப்படும். ஐக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதேபோல் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் மிகவும் நல்ல நாளாக இருக்கும். தோஷங்களும் நீங்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |