Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! திறமை வெளிப்படும்..! முன்னேற்றம் உண்டாகும்..!

சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று எல்லா காரியங்களும் முன்னேற்றகரமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் கையில் வந்துச்சேரும்.

உங்களுடைய திறமை வெளிப்படும். பலவகையிலும் நல்ல முன்னேற்றம் காத்திருக்கிறது. சொத்து விஷயத்திலும் முன்னேற்றம் ஏற்படும். இடமாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். ஆன்மிக திற்காக சில தொகையும் செலவிட நேரிடும். நண்பர்கள், உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாகவே இன்று உழைக்க வேண்டியதிருக்கும். வருமானம் நல்லபடியாக இருக்கும். சற்று முயற்சி மேற்கொண்டால் பதவி உயர்வு வந்துச்சேரும். எதிர்பார்த்த பணியிட மாற்றம் வந்தடையும். மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். இன்று பணவரவு தாராளமாக இருக்கும். கணவன் மனைவி இருவருக்கும் நல்ல அன்பு ஏற்படும். குடும்பத்திலும் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். காதலில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் சுமூகமாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதேபோல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு கார்த்திக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுத்து வாருங்கள், உங்கள் வாழ்க்கையிலுள்ள தோஷங்கள் நீங்கி செய்யும் செயலில் வெற்றி ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 4.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |