Categories
அரசியல் தேசிய செய்திகள்

பீகார் இரண்டாம்கட்ட தேர்தலில் 34% கோடீஸ்வர வேட்பாளர்கள்…!!

பீகார் சட்டமன்றத்திற்கான இரண்டாம் கட்ட தேர்தலில் களம் காண 34 சதவீத வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது.

743 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வழக்கம்போல இந்த ஆண்டும் முக்கிய அரசியல் கட்சிகள் கோடீஸ்வர வேட்பாளர்களை களமிறங்கியுள்ளனர். வரும் நவம்பர் மூன்றாம் தேதி 94 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும்  1,463 வேட்பாளர்களில் 495 பேர் கோடீஸ்வர வேட்பாளராக உள்ளனர்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி வேட்பாளர்கள் 56 பேரில் 46 பேருக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. பாஜக 39 கோடிஸ்வர வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. சிராக் பஸ்வான் இன் கட்சியில் 52 பேரில் 38 பேர் கோடீஸ்வரர் வேட்பாளராக உள்ளனர்.மற்ற கட்சி வேட்பாளர்களை விட காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் மாநில பொதுச் செயலாளரும் ஆன சஞ்சீவ் சிங் 56 கோடி ரூபாய் சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

Categories

Tech |