திருமண நிகழ்ச்சியின்போது நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டதால் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது.
கனடாவிலுள்ள ஒன்றாரியோவில் சில தினங்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சி ஒன்று இரண்டு நாட்களாக தொடர்ந்து நடத்தப்பட்டது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அத்திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 46 நபர்களுக்கு வியாழக்கிழமையன்று கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சம் 33 நபர்கள் பீல் பகுதியைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள் யார்க் மற்றும் வாட்டலு உள்ளடக்கிய பல பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
யார்க் பகுதியின் துணை மருத்துவ அலுவலரான Dr.Allana fitzgerald-husek கூறுகையில்,”அந்த திருமணத்தில் விதிமுறையை மீறி அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான நபர்கள் கலந்து கொண்டதால் கொரோனா தொற்று பரவியுள்ளது” என்று கூறியுள்ளார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விதிமுறையை மீறி திருமணத்தில் அதிகமானோர் கலந்து கொண்டதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.