நெய் சாதம் செய்ய தேவையான பொருள்கள்:
பாசுமதி அரிசி – 1 கிலோ
பட்டை, கிராம்பு – சிறிதளவு
சோம்பு – சிறிதளவு
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
இஞ்சி, பூண்டு – தேவைக்கு ஏற்ப
நெய் – 200 கிராம்
தக்காளி – 1
தேங்காய் – 1 மூடி
செய்முறை:
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, தேங்காயை நறுக்கி கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து நெய்யை ஊற்றி, பட்டை, கிராம்பு, நறுக்கிய வெங்காயம், புதினா, தக்காளி, இஞ்சி, பூண்டு, உப்பு போட்டு நன்கு வதக்கி கொள்ளவும்.
பின்பு பாசுமதி அரிசியை நன்றாக கழுவி வடிகட்டி அதனுடன் போட்டு நன்கு கிளறி, தண்ணீரை 2 மடங்கு அளவுக்கு ஊற்றி, அத்துடன் தேங்காய் பால் சேர்த்து கலக்கி குக்கரை மூடி வைக்கவும்.
குக்கரில் 2 விசில் வந்ததும், அதில் சிறிது நெய்யை ஊற்றி கிளறி இறக்கினால் சுவையான நெய் சாதம் ரெடி.