Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு..! வெற்றி பெருகும்…! முன்னேற்றம் உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே…! இன்று தொழில் தொடர்பான பயணங்கள் வெற்றியை கொடுக்கும்.

செயல்திறன் மூலம் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மேல் அதிகாரிகளின் கனிவான பார்வை உங்கள் மேல் விழும். பாராட்டுகளும் கிடைக்கும். அதிகாரம் செய்யும் பதவி உங்களைத் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். மனதில் அமைதியான சூழ்நிலையும் ஏற்படும். சுப காரியங்கள் இல்லத்தில் நடக்கும் வாய்ப்பு இருக்கு. திருமணத்திற்காக முயன்றவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

எதிரிகள் வழியில் அசட்டையாக இருக்கக்கூடாது. புதிய உதவிகள் செய்யும் பொழுது ஆலோசனை கண்டிப்பாக வேண்டும்.பெரியவர்களிடம் ஆலோசனை கேளுங்கள் இல்லையேல் உங்கள் மனைவியிடம் ஆலோசனை கேளுங்கள்.குடும்பத்தாரிடம் கலந்து எந்த ஒரு முடிவையும் எடுங்கள்.

மீனம் ராசிக்காரர்களுக்கு என்றும் முன்னேற்றம் இருக்கும். பல விஷயங்கள் பொருத்தவரை எந்த ஒரு பிரச்சனை இல்லை. ஆனால் பணம் விஷயங்களில் அக்கறையுடன் நடந்து கொள்ளுங்கள். அலட்சியம் வேண்டாம். எதிலும் கூடுதல் கவனம் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர் கூறுவதில் உண்மை எது பொய் எது என்று கூர்மையாக ஆராய்ந்து முடிவுகளை எடுங்கள்.

யாரையும் அலட்சியப் படுத்தி கொள்ள வேண்டாம்.தயவுசெய்து மீனம் ராசிக்காரர்கள் பஞ்சாயத்துகளில் கலந்து கொள்வதை தவிர்த்து விடுங்கள். யாருக்கும் அறிவுரைகள் ஏதும் சொல்ல வேண்டாம். இன்று காதலில் உள்ளவர்கள் எப்போதும் போல நிதானமான போக்கை வெளிப்படுத்துவீர்கள். நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவக் கண்மணிகள் கொஞ்சம் சிரமம் எடுத்து பாடங்களை படியுங்கள்.

விளையாடும் பொழுது கண்டிப்பாக எச்சரிக்கையுடன் விளையாடுங்கள்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் நீங்கள் ஆடை அணியவேண்டும் வெள்ளை உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் வைத்து வாருங்கள். இன்று உங்களுக்கு தோஷம் விலகும். செய்யும் காரியங்களில் வெற்றி ஏற்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிர்ஷ்ட எண் 7 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |