Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“தற்கொலை பண்ணிக்கலாம் வா” பெண்ணிற்கு விஷம்…. கள்ளக்காதலன் கைது…!!

சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறி கள்ளக்காதலிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வேல்முருகன்-லதா தம்பதியினர். வேல்முருகனின் இரண்டாவது மனைவியான லதா ஏழுமலை என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் லதாவிற்கு ஏழுமலைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவ்வப்போது தனிமையில் சந்தித்து பழகி வந்தனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென லதா மாயமானார்.

பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் அவர் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் விஷம் குடித்துவிட்டு அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.  இதனை தொடர்ந்து லதாவின் கணவர் வேல்முருகன் விரைந்து சென்ற போது அவரது மனைவி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி காவல் நிலையத்தில் வேல்முருகன் புகார் அளித்தார். புகாரை ஏற்ற காவல்துறையினர் ஏழுமலையை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது லதா உடனான கள்ளத் தொடர்பினால் தனது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் அதனால் அவரை கொலை செய்ய ஏழுமலை திட்டமிட்டதும் தெரியவந்தது.

தன்னிடம் தன்னைத் தேடி வந்த லதாவை வெளியூருக்கு அழைத்துச் சென்று அவருடன் நெருக்கமாக இருந்து விட்டு இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என லதாவிடம் தெரிவித்துள்ளார். ஏழுமலையை நம்பிய லதா ஒப்புக்கொள்ள அங்கிருந்த ஏரிபகுதிக்கு அவரை அழைத்துச் சென்றார். அங்கு வைத்து தனது திட்டப்படி லதாவிற்கு ஏழுமலை விஷத்தை கொடுத்துள்ளார். இது அனைத்தையும் கேட்ட காவல்துறையினர் ஏழுமலையை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Categories

Tech |