Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கல்யாண வீட்டு… வற்றல் குழம்பு… இப்படி செய்து பாருங்க..!!

வற்றல் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

புளி                                           – 1 எலுமிச்சம்பழ அளவு
மல்லிப்பொடி                     – 4 தேக்கரண்டி
மிளகாய் பொடி                  – 2 தேக்கரண்டி
எண்ணெய்                            – சிறிதளவு
கடுகு                                        – சிறிதளவு
வெந்தயம்                             – சிறிதளவு
உளுத்தம்பருப்பு                 – சிறிதளவு
கடலைப்பருப்பு                   – சிறிதளவு
துவரம்பருப்பு                       – அரை ஸ்பூன்

செய்முறை:

பாத்திரத்தில் புளியை கரைத்து அதிலுள்ள தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும் . மேலும் அதில் மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதன் பிறகு வெங்காயம்,தக்காளி, மிளகாய் நறுக்கி கொள்ளவும்

பிறகு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, சேர்த்து வதக்கி கொள்ளவும்.

மேலும் அதனுடன் வெங்காயம், தக்காளி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து, கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி கொதித்ததும் கருவேப்பிலை தூவி  இறக்கினால் சுவையான வற்றல் குழம்பு ரெடி.

Categories

Tech |