பள்ளி மாணவர்களிடம் போதைப்பொருள் விற்போர் குறித்த தகவலை காவல்துறையினரிடம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது .
பள்ளிகளுக்கு அருகிள் போதைப்பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் குறித்த தகவலை காவல்துறையினரிடம் தெரிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்விதுறை இயக்குநர் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளிட்டுள்ளார் .
இந்த அறிக்கையானது தமிழகத்தின் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்விதுறை அலுவலத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது ,பள்ளி மாணவர்களுக்கு இனிப்புப்பண்டங்கள்,உருளைகிழங்கு சிப்ஸ் மற்றும் தர நொறுக்குத்திண்ணி வகைகளுடன் சிகரெட் புகையிலை போன்ற போதைப்பொருள்களை விற்பனை செய்யும் நபர்கள் பள்ளிகளுக்கு அருகில் காணப்பட்டால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் மேற்கொண்டு .பள்ளி மாணவர்களிடம் சிகரெட் புகையிலை விற்கும் நபர்களின் பிடியில் இருந்து மாணவர்களை பாதுகாக்க தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும் தலைமை ஆசிரியர்களுக்கு இது தொடர்பாக அதிக அளவில் விழிப்புணர்வு மற்றும் அறிவுறுத்தலை வழங்குமாறு மாவட்ட முதன்மை பள்ளி கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக்கல்விதுறை உத்தரவிட்டுள்ளது .