அதலக்காய் புளி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
அதலக்காய் – 300 கிராம்
வெங்காயம் – 100 கிராம்
மிளகாய் – 3 மல்லி – 2
அரிசிப்பொரி மாவு – 1 மேசைக்கரண்டி
புளி – 1 எலுமிச்சம்பழ அளவு
கருவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – தேவையான அளவு
அரைக்க வேண்டியது
வற்றல் – 6
சீரகம் – 2 மேஜைக்கரண்டி
பூண்டு – 1
செய்முறை:
முதலில் அதலைகாய் எடுத்து காம்புகளை நீக்கி தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் வற்றல், சீரகம், பூண்டு வறுத்து எடுத்து மிக்சி ஜாரில் அரைக்கவும்.
பாத்திரத்தில் புளியை எடுத்து தண்ணீரில் கரைத்து ஊற்றி அத்துடன்அரைத்த மசால் சேர்க்கவும். அடுப்பில் கடாயை வைத்து அதில் கழுவிய அதலக்காயை, தேவையானஅளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
பின்பு வேக வைத்த அதலக்காயில், கரைத்து வைத்த புளித்தண்ணீர், அரைத்த மசாலா சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வதங்கியபின் அதனை அதலக்காயில் சேர்த்து வேக வைக்கவும். இறுதியில் அரிசி பொரிமாவு சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான அதலக்காய் புளிக்குழம்பு ரெடி.