பட்டூரா அல்லது தயிர் பூரி செய்ய தேவையான பொருட்கள்:
மைதா – 500 கிராம்
உப்பு – ஒரு தேக்கரண்டி
தயிர் புளிக்காது – ஒரு கப்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதாவை சலித்து, ஒரு தேக்கரண்டி உப்பை போட்டு, தயிர் விட்டுப் நன்கு பிசைந்து ஊற வைக்கவும்.
இதனை முந்தின இரவே ஊற வைத்து விட்டு மறுநாள் காலையில் பூரி, சப்பாத்தி போலன்றி நாண் மாதிரி கனமான வட்ட வடிவில் இட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதனை சன்னா மசாலா உடன் சாப்பிடடால் சுவை அருமையாக இருக்கும்.