Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

முந்திரி பர்பி… சத்து மிகுந்த ரெசிபி…!!

முந்திரிப்பருப்பு பர்பி செய்ய தேவையான பொருட்கள்:

முந்திரிப் பருப்பு       – ஒரு கப்
மைதா மாவு                – ஒரு கப்
சீனி                                  – 3 கப்
தண்ணீர்                       – கால் கப்
நெய்                                – 2 கப்

செய்முறை:

முந்திரி பருப்பை லேசாக வெறுஞ்சட்டியில் சூடாக்கி பொடி பண்ணவும். பாத்திரத்தில் தண்ணீரர், சீனி, முந்திரி பருப்பு மாவு போட்டு கொதிக்க விடவும்.

அதனை தொடர்ந்து நன்கு கொதித்த பின் மைதாவை சிறிது சிறிதாக தூவி கட்டி இல்லாமல் கிளறவும்.

பாத்திரத்தில் ஓட்டும் போது சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறி கொள்ளவும். பர்பி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும். இப்போது சுவையான முந்திரி பருப்பு பர்பி ரெடி.

Categories

Tech |