வாழைத்தண்டு பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு – தேவையான அளவு
மோர் – 1 கப்
கருவேப்பிலை – சிறிதளவு
கடுகு, உளுந்தம்பருப்பு – சிறிதளவு
வெங்காயம் – 1
மிளகாய் – 3
தேங்காய்த்துருவல் – அரைக்கப்
செய்முறை
வாழைத்தண்டை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கியபின் மோர் கலந்த தண்ணீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும். ஏதேனும் ஒரு குச்சியினால் வாழைத்தண்டை கிண்டிக் கொண்டே இருந்தால் அதிலுள்ள நார் முழுவதும் குச்சியில் சுற்றிக் கொள்ளும்.
அடுப்பில் கடாயை வைத்து மோரை ஊற்றி அதில் வாழைத்தண்டை சேர்த்து வேக விடவும். வேக வைத்த வாழைத்தண்டானது நன்கு வெந்து தண்ணீர் வற்றியவுடன் உப்பு சேர்த்து கிளறவும்.
அடுப்பில் வேறு ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின்பு தாளித்ததை வேகவைத்த வாழைத்தண்டில் ஊற்றி, அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறினால் சுவையான வாழைத்தண்டு பொரியல் ரெடி.