44 வயது நபரை திருமணம் செய்த மகள் தொடர்பாக பெற்றோர் சில உண்மைகளை தெவித்துள்ளனர்
காணாமல் போன மகள்
பாகிஸ்தானில் இருக்கும் கராச்சி பகுதியை சேர்ந்தவர் அர்ஷு ராஜா. இவர் கடந்த 13 ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல் போனார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்தனர்.
திருமணச் சான்றிதழ்
இந்நிலையில் அர்ஷு ராஜா 44 வயதான ஒருவரை தான் திருமணம் செய்து விட்டதாக கூறியது மட்டுமல்லாமல் திருமண சான்றிதழுடன் தனது பெற்றோர் முன் வந்து நின்றார். இந்த திருமணத்திற்கு கராச்சி பகுதியில் பெரும் எதிர்ப்பு நிலவியது. ஆனால் தனது முழு விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டதாக பெண் கூறியதால் நீதிமன்றம் திருமணத்தை உறுதி செய்தது.
கணவனின் மிரட்டல்
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது பெண் தனது தாயை பார்த்ததும் அவரிடம் செல்வதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் அவரது 44 வயது கணவன் அவரை செல்லவிடாமல் பிடித்து வைத்தது மட்டுமில்லாமல் அந்த பெண்ணை பெற்றோரிடம் செல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெற்றோர் கூறிய உண்மைகள்
இது குறித்து பெண்ணின் தந்தை கூறுகையில், “எனது மகள் கடத்தப்பட்டால். அவளது விருப்பத்துடன் இந்த திருமணம் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெண் இஸ்லாம் மதத்திற்கும் கட்டாயமாக மாற்றப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அவளது திருமண சான்றிதழில் 18 வயது என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் எங்கள் மகளின் உண்மையான வயது 13 தான் அதற்கான சான்றிதழ் எங்களிடம் உள்ளது. மகள் காணாமல் போன நாள் முதல் கடத்தல்காரர்களிடமிருந்து பல மிரட்டல்கள் எங்களுக்கு வந்தது” என வேதனையுடன் கூறியுள்ளார்.